அனுப்புதல்
நாங்கள் ஒரு சிறிய குழு என்பதால் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே தருவிப்புகள் அனுப்பி வைக்கப்படும். தமிழகத்திலோ அல்லது புதுச்சேரியிலோ உங்கள் அஞ்சல் முகவரி இருந்தால் அனுப்பப்படும் நாளில் இருந்து புத்தகங்கள் உங்களை வந்து அடைய 2-3 நாட்கள் வரை ஆகலாம். இந்தியாவின் பிற பகுதிகள் என்றால் கிட்டத்தட்ட 5-7 நாட்கள் வரை ஆகலாம்.
புத்தகங்களை வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு மூன்றாம் தரப்பு விநியோக சேவைகளை MAAVILAI™ பயன்படுத்துகிறது. எனவே, புத்தகங்கள் விநியோகமாக தாமதம் ஆனாலோ, அனுப்புகையில் புத்தகங்கள் தொலைந்துப் போனாலோ அல்லது சேதம் அடைந்தாலோ அதற்கு MAAVILAI™ பொறுப்பு ஏற்காது. எனினும் நீங்கள் பெற்ற புத்தகங்களில் ஏதேனும் குறைபாடு இருந்தால், புத்தகத்தில் என்ன குறைபாடு உள்ளது என்பதை உங்களின் தருவிப்பு எண்ணுடன் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.
குறிப்பு: முன்பதிவு செய்யப்பட்ட எல்லாப் புத்தகங்களும் மார்ச் 18, 2022 அன்று அனுப்பி வைக்கப்படும்.
திரும்பப் பெறுதல் மற்றும் ரத்து செய்தல்
பணம் செலுத்திய பிறகு பயனர் தருவிப்பை ரத்து செய்யவோ திரும்ப அனுப்பவோ முடியாது.
ஏதேனும் தருவிப்புகள் மாற்றி அனுப்பப்பட்டு இருந்தால், அதாவது உங்களின் தருவிப்பில் இருக்கும் ஒரு சில புத்தகங்களோ அல்லது அனைத்துப் புத்தகங்களோ தவறி போய் இருந்தால், தயவு செய்து நீங்கள் எங்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். இது மாதிரியான சூழ்நிலைகளில் தவறி போன புத்தகங்களை மீண்டும் உங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டுமெனில் எங்களிடம் கோரிக்கை வைக்கலாம் அல்லது நீங்கள் பெற்ற புத்தகங்களை எங்களுக்கு திருப்பி அனுப்பிவிட்டு பணத்தைத் திரும்பப் பெறலாம்.
புத்தகங்கள் உங்களை வந்து அடைந்த நாளில் இருந்து 7 நாட்களுக்குள் நீங்கள் எங்களைத் தொடர்பு கொண்டு உங்களின் குறைபாட்டினை தெரிவித்தால் மட்டுமே பணத்தைத் திரும்பப் பெறுதல் என்பது சாத்தியமாகும். இந்த 7 நாட்களுக்குப் பிறகு எங்களால் பணத்தைத் திரும்ப அனுப்ப இயலாது.
புத்தகத்தைத் திரும்ப அனுப்ப வேண்டுமெனில் அது பயன்படுத்தப்படாமலும் அனுப்பப்பட்ட அதே நிலையிலும் இருக்க வேண்டும். உங்களுக்கு அனுப்பப்பட்ட அதே பேக்கிங் உடன் இருக்க வேண்டும்.
இந்த இணையத்தளத்தில் அல்லாமல் வெளியே பெறப்பட்ட எங்களின் புத்தகங்களை எங்களால் திரும்பப் பெற இயலாது.
புத்தகங்களை நாங்கள் திரும்பப் பெறுவதற்கு புத்தகங்களை வாங்கியதற்கான ரசீதோ அல்லது சான்றோ எங்களுக்கு அவசியம் தேவை.
பணத்தைத் திரும்பி கொடுத்தல்
உங்கள் புத்தகத்தை திரும்பப் பெற்று அதனை நாங்கள் ஆய்வு செய்தப் பிறகே, பணம் திரும்பப் பெறும் உங்களின் கோரிக்கை ஒப்புக் கொள்ளப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்று நாங்கள் உங்களுக்குத் தெரிவிப்போம். ஒருவேளை உங்களின் கோரிக்கை ஒப்புக் கொள்ளப்பட்டால், பணம் திருப்பி அனுப்பும் செயல்முறை துவங்கப்பட்டு, குறிப்பிட்ட சில நாட்களிலேயே உங்களின் கடன் அட்டை அல்லது தொகை செலுத்தப்பட்ட முறைக்கே பணம் திரும்ப அனுப்பப்படும்.
குறிப்பிட்ட நாட்களில் நீங்கள் பணத்தைத் திரும்பப் பெறவில்லை எனில் உங்களின் வங்கி கணக்கில் பணம் வந்துள்ளதா என்பதை பாருங்கள். இல்லையெனில் உங்கள் வங்கியை தொடர்பு கொள்ளுங்கள்; பணம் வங்கி கணக்கில் வந்து சேர்வதற்கு முன்னர் அதற்கான செயல்முறைக்கென சிறிது நேரம் தேவைப்படும். நீங்கள் மேற்கூறிய அனைத்தையும் முயற்சி செய்தப் பின்னரும் பணம் உங்கள் வங்கி கணக்கில் வந்து சேரவில்லை எனில் எங்களை தயவு செய்து தொடர்பு கொள்ளுங்கள்.